திரிபோஷா திட்டம் நிறுத்தப்படுமா?: நிதி அமைச்சு பதில்

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா விநியோகிக்கும் ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடட் என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மூடுவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லையென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

ஊட்டச் சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய ஆதாரமாகச் செயற்படும் நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து நிதி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹோமாகமவில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை விமர்சித்து, நிறுவனத்தை சிதைக்கும் ஏமாற்றும் திட்டம் என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லையென அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கும் திட்டம் மேலும் பயனளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபோஷா நிறுவனத்திற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் வலுவான அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

டிடி

Recommended For You

About the Author: admin