வெளிநாட்டுச் சேவையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள்: மீள அழைக்கப்படும் சிலரின் பெயர்கள் இதோ!
கடந்த அரசாங்கத்தின்போது அரசியல்வாதிகளின் உறவினர்ர்கள் என்ற அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு இராஜதந்திர சேவைகளுக்காக அனுப்பப்பட்ட 16 அதிகாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய இந்த அதிகாரிகளை இலங்கைக்கு திரும்ப அழைக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இலங்கை துணைத் தூதராகப் பணியாற்றும் கலாநிதி லலித் சந்திரதாச, சீனாவின் ஷாங்காய் நகரில் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றும் அநுர பெர்னாண்டோ, சென்னையில் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றும் கலாநிதி டி. வெங்கடேஸ்வரன் ஆகியோரும் நாட்டுக்கு அழைக்கப்படவுள்ள பட்டியலில் அடங்கியுள்ளனர்.