இலங்கை சுங்கத்தின் பல்வேறு திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்ட 8450 சுங்க விசாரணைகள் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.
இவற்றில் 3080 விசாரணைகள் ஐந்தாண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாமல் உள்ளன.
4348 விசாரணைகள் இரண்டு முதல் நான்கு ஆண்டுகளாகவும், 1022 விசாரணைகள் ஒரு வருடமாகவும் தீர்க்கப்படாமல் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாண்டு ஆரம்பம் வரையிலான இந்த விசாரணை அறிக்கையில் இலத்திரனியல் மையப்படுத்தப்பட்ட தகவல் முறைமையின் படி குறித்த தொகைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சுங்கத்தின் பிரதான கணக்காய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டு சீரழிந்து, உளவாளிகள் மற்றும் அதிகாரிகளின் மனஉளைச்சலுக்கு ஆளாவதால், விசாரணையை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் என தணிக்கை பரிந்துரைத்துள்ளது.