அநுரவின் அரசியல் சமஷ்டி நோக்கி நகரும் என்கிறார் கம்மன்பில

“2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பை இயற்றும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கவும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகி இருந்தாலும், அதனை மீள அமுல்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.“

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தமிழ் தரப்புக்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி, தமிழ் தரப்பிடம் வழங்கப்படவுள்ளதாகவும் தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை. 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை அமுல்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை.

இவற்றுக்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இதற்கு தன்னிடம் சாட்சிகள் இல்லை. தகவல்களை வெளிப்படுத்துவதாகவும் அதனை நாட்டு மக்களுக்கு கூறும் வெளிப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin