உதய கம்மன்பில வெளிப்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை நேர்மையற்ற ஒரு ஆவணம் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ரவீ மற்றும் ஷானி ஆகியோரை பதவி நீக்கம் செய்வதே கம்மன்பிலவின் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகளின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகள் உதய கம்மன்பில வெளியிட்டமை தொடர்பில் தற்போது கொழும்பு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறான போலிப் பிரச்சாரத்தில் உதய கம்மன்பில ஈடுபட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தனது அரசியல் விளையாட்டை ஆரம்பித்து ரவீ செனவிரத்னவை பதிவி நீக்கம் செய்ய வேண்டும் பிரச்சாரம் நடத்தி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தேவைகளுக்காக நியமிக்கப்பட்ட இரு ஆணைக்குழு அறிக்கைகளை மையப்படுத்தி அவர் மேலும் பிரச்சாரம் செய்து வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது.
இவை அனைத்தும் உதய கம்மன்பில எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளும் விடயங்கள் என அரசியல் விமர்சகர்கள் பலர் விமர்சித்தும் வருகின்றனர்.