அத்தனகலு ஓயா தூனமலே பகுதியிலிருந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியியலாளர் எஸ்.பி.சி.சுசீஸ்வர தெரிவித்துள்ளார்.
“கம்பஹா மாவட்டத்தின் ஊடாக பாயும் அத்தனகலு ஓயா பள்ளத்தாக்குக்கு கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசன திணைக்களம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாயம் இன்னும் உள்ளது.”
“திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா எல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவின் தாழ்நிலப் பகுதிகளில் இன்றும் வெள்ள நிலைமை தொடரும்.”
தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமைகள் தொடர்ந்து சிறிது சிறிதாக உருவாகலாம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்..”