பொதுத்தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் இதோ!
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட ஆறு கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது. அக்கட்சிகளின் செயலாளர்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியமையே அதற்குக் காரணம்.
இதன்படி, ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி, ஐக்கிய லங்கா மகா சபை, இலங்கை மக்கள் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகள் அந்த வாய்ப்பை இழக்கும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடிய போதும் அது வெற்றியளிக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதன் காரணமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தக் கட்சிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் மாத்திரமே இழக்கப்பட்டுள்ளதாக திரு சமன் ஸ்ரீரத்நாயக்க மேலும் வலியுறுத்தினார்.