சமஸ்டி, பாரம்பரிய தமிழர் தாயகத்தை ஏற்காத ஜேவிபி

சமஸ்டி, பாரம்பரிய தமிழர் தாயகத்தை ஏற்காத ஜேவிபி

ஜேவிபியின் தமிழர் விரோத கடந்த காலங்கள் சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவைஇலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி எதிர்கால ஜனநாய செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது

 

பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது

 

மிகமோசமான அரசாங்கங்களின் கீழ்; தேசம் திணறிக்கொண்டிருந்த தருணத்தில் அமைப்பு முறையில் தீவிர மாற்றங்களை கொண்டுவரும் வாக்குறுதியை வழங்கிய அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பது, அவரின் வருகை, இலங்கை மக்களிற்கு பெரும் நிம்மதியை அளிக்கும் விடயம் போல தோன்றுகின்றது.

 

தமிழ் மக்களிற்கு எதிரான 75 வருட வன்முறைகள் இனப்படுகொலைகளை இந்த மாற்றம் முடிவிற்கு கொண்டுவருமா?

 

இந்த அறிக்கை அனுரகுமாரதிசநாயக்கவின் அடித்தளமான ஜேவிபியின் தீயகடந்த காலத்தை அம்பலப்படுத்துகின்றது.

 

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்க யார் , அவரின் பின்னணி என்ன?

 

அவர் பலதெரிவிப்பது போல ஒரு மார்க்சிசவாதியில்லை மாறாக அவர் இலங்கை அரசியலில் இடதுசாரி சிங்கள தேசியவாதி.

 

அவரது ஆட்சிக்காலத்தில் இன்னமும் இடம்பெறாத விடயங்களிற்கான சான்றாக அவரது அரசியல் வாழ்க்கை காணப்படுகின்றது.

 

இந்த அறிக்கையில் பிரித்தானிய தமிழர் பேரவை ஜேவிபி மற்றும் அனுரகுமாரதிசநாயக்க குறித்து சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றது.

 

தனது மாணவர் காலத்தில் அனுரகுமாரதிசநாயக்க தமிழ் எதிர்ப்பு மேற்குலக எதிர்ப்பு கொள்கைவாதியாக இந்திய எதிர்ப்பு சிங்களபௌத்த அடிப்படைவாத அமைப்பான ஜேவிபியில் இணைந்தார்.

 

1987 இல் இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்தார்- வன்முறைகளை முன்னெடுத்தார்

 

ரணில்விக்கிரமசிங்கவின் ஐக்கி;யதேசிய முன்னணிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் எதிரான நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளை எதிர்க்கும் முக்கிய அரசியல் சக்தியாக 2001 முதல் 2004 ம் ஆண்டிற்கும் இடையில் ஜேவிபி பிரபல்யம் பெற்றது.

 

2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து ஜேவிபி சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான சக்திவாய்ந்த மற்றும் ஒத்திசைவான அரசியல் வேலைதிட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது.

 

2003 இல் கொழும்பில் மாதத்திற்கு ஒரு முறை என்ற அடிப்படையில் ஜேவிபி பெரும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தது, இதன் காரணமாக தலைநகரம் பல முறை முடங்கியது.

 

ஐக்கிய தேசிய கட்சியின் சந்தை சீர்திருத்த கொள்கை குறித்து மக்கள் மத்தியில் காணப்பட்ட அதிருப்தியை வெற்றிகரமாக பயன்படுத்திய ஜேவிபி தொழிற்சங்கங்கள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி 2003 இன் பிற்பகுதியிலும் 2004 இன் ஆரம்பத்திலும் சுகாதார போக்குவரத்து துறை போன்றவற்றில் பணி பகிஸ்கரிப்பு போராட்டங்களை முன்னெடுத்தது.

 

இதன் மூலம் சமாதான உடன்படிக்கைக்கு எதிரான மக்களின் உணர்வுகளை திரட்டுவதில் ஜேவிபி முக்கிய பங்களிப்பை செய்தது.

 

ஜேவிபி இதன் மூலம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு கடும் அழுத்தங்களை கொடுத்தது. அவர் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கலைத்தமைக்கான காரணமாக இதனை முன்வைத்தார் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

 

அரசாங்கம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் இடம்பெற்றது.

 

இந்த வலுவான தொடர்ச்சியான தேர்தல் பிரச்சாரத்தின் மூலம்ஜேவிபி 2004 இல் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாதிப்பை ஏற்படுத்தியது , இதுசமாதான முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

 

2004 ஏப்பிரலிற்கு பின்னரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிடிவாதமான விட்டுக்கொடுப்பற்ற அரசியல் கூட்டாளியாக ஜேவிபி காணப்பட்டமை,சமாதான முயற்சிகளிற்கு மீண்டும் புத்துயுர் கொடுக்கும் முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

 

சமாதான முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காக அவர்கள் முன்நிபந்தனைகளை விதித்தனர்,சுனாமி பொதுக்கட்டமைப்பு தொடர்பில் விடுதலைப்புலிகளுடன் எந்த இணக்கப்பாட்டையும் ஏற்கமறுத்தனர்.

 

சமாதானஉடன்படிக்கைக்கு எதிரான அரசியல் மேடையில் நின்று 2005 இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவேளை ஜேவிபியினர் அதற்கு ஆதரவளித்தனர்.

 

2006 முதல் ஜேவிபி வெளிப்படையாகவே இனப்பிரச்சினைக்கு இராணுவதீர்வை முன்வைத்தது.அரசாங்கத்தை மீண்டும் இராணுவநடவடிக்கையை ஆரம்பிக்குமாறு தூண்டியது அழுத்தஙகளை கொடுத்தது.

 

சமாதான முன்னெடுப்புகளிற்கு எதிரான பிரச்சாரத்தி;ல் ஜேவிபி தமிழ் தேசியவாதத்தை ஜனநாயகமற்ற இனப்பிரத்தியோகவாதத்தின் பேரினவாத சித்தாந்தமாக வகைப்படுத்தியது.

 

பயங்கரவாத அமைப்பால் ஊக்குவிக்கப்பட்டது என தமிழ்தேசியவாதம் குறித்து ஜேவிபி தெரிவித்தது.

 

ஜேவிபியின் உறுதியாக வேரூன்றிய அரசியல் கொள்கைகளாக பின்வரும் விடயங்கள் காணப்படுகின்றன.

 

ஒற்றையாட்சி முறையை கொண்ட நாடு- நாடாளுமன்றத்தில் எந்த அதிகாரபகிர்வும் இல்லை.

 

பாரம்பரிய தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தல்

 

அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை ஏற்பதில்லை.

 

யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகளிற்கு சர்வதேச குற்றவியல் நீதி பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான சர்வதேச செயற்பாடுகளை எதிர்ப்பது.

 

தமிழ் மக்களின் இன்றைய அவலநிலை சட்டியிலிருந்து நெருப்புக்குள் விழுந்தது போல இருக்கின்றதா?

 

இலங்கையின் வடக்குகிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி எதிர்கால ஜனநாய செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளவே;ண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

 

இலங்கையின் வடக்குகிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கரிசனைகளிற்கு முன்னுரிமையளித்துள்ளனர்.

 

இந்த பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளபோல,எந்தவொரு அரசியல் தீர்வும்,தமிழ் மக்களின் உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு சமஸ்டிக்கொள்கையின் அடிப்படையில் அமைந்ததாக காணப்படவேண்டும்.

 

சர்வதேச மத்தியஸ்த செயல்முறை மூலம் பேச்சுவார்த்தை மூலம் அரசியல்தீர்வை உருவாக்கவேண்டும்.இந்த தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அமெரிக்கா இங்கிலாந்து கனடா போன்ற நாடுகளின் முழு உத்தரவாதமும் வழங்கப்படவேண்டும்.

Recommended For You

About the Author: admin