ரணிலின் உறவினர் என நம்பப்படுபவரால் பூநகரியில் மண் அகழ்வதற்கு மேற்கொண்ட முயற்சிக்குத் ‘ஆப்பு’.

ரணிலின் உறவினர் என நம்பப்படுபவரால் பூநகரியில் மண் அகழ்வதற்கு மேற்கொண்ட முயற்சிக்குத் ‘ஆப்பு’.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் பரமன்கிராய் பகுதியில் 130 ஏக்கர் நிலத்தில் 02-10-2024 அன்றுமுதல் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உறவினர் என நம்ப்ப்படுபவரின் பெயரில் உள்ள நிறுவனத்திற்கு மணல் அகழப்பட மேற்கொண்ட முயற்சி மாவட்ட மற்றும் மாகாண அரச திணைக்களங்களால் இடை நிறுத்தப் பரிந்துரைத்துள்ளனர்.

பூநகரி பரமன்கிராயில் காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் ஆளுகையில் உள்ள நிலத்திலேயே இவ்வாறு மணல் அகழ்வதற்காக அன்றைய தினம் கனரக வாகனங்கள் சகிதம் அப்பகுதிக்கு வருகைதந்தபோது அங்கே சகல தரப்பினரும் ஆய்வில் ஈடுபட்டனர்.

இதில் பூநகரி பிரதேச செயலாளரின் பிரதிநிதி, பரமன்கிராய் கிராம சேவகர், காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் பிரதிநிதிகள், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இப் பகுதியில் மணல் அகழப்படவுள்ள பகுதியைச் சூழ பெருமளவு மக்கள் வாழ்கின்றபோதும் அவை தொடர்பில் கருத்தில் எடுக்கப்படாது இதற்கான ஏற்பாட்டினை 2024-09-26 அன்று புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர் வழங்கியதான மக்கள் கருத்து, அப்பகுதி நிலம் எமது ஆளுகைக்கு உட்பட்ட நிலம்தான் ஆனால் எவருக்கும் பாரப்படுத்தப்படாதபோதும் தமக்குச் சொந்தம் என பெருந்தோட்டச் சபை உரிமை கோரி நிற்பதோடு இந்த மணல் அகழ்விற்கான அனுமதிகளையும் அவர்களே வழங்கியுள்ளதாக காணிச் சீர்திருத்த ஆணைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேநேரம் இப் பகுதியில் வாழும் எமக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான இந்த ஆபத்தை அனைவரும் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே இதுதொடர்பில் மாவட்ட அரச அதிபர் மற்றும் மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வைப் பெறும் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என பிரதேச செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு பணிகள் யாவும் இடை நிறுத்தப்பட வேண்டும் என பணிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin