பொதுத் தேர்தலை எதிர்க்கொள்ள தேசிய மக்கள் சக்தியினர் அஞ்சுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலின் போது நூற்றுக்கு 50 வீத பெரும்பான்மையினை பெறமுடியாமல் போனமையினால் முதற்தடவையாக விருப்பு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் 43 வீத வாக்குகளினால் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடத்தில் நாம் ஒரு விடயத்தினை சிந்திக்க வேண்டும். தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை வெறும் 43 வீதமாகும். அதாவது 56 வீதமானவர்கள் அவருக்க எதிராகவே ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறுகையில் அச்சமடைவது எதிர்த்தரப்பினரே. ஆனால் இம்முறை அது மாற்றமடைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத்தேர்தல் இடம்பெறுகின்றது. அந்த தேர்தலை எதிர்கொள்ள அரசாங்கம் தயங்குகின்றது.
113 பெரும்பான்மையினை பெறுமுடியுமா என்ற கேள்வி அவர்களிடத்தில் எழுந்துள்ளது.
இந்த விடயங்களை கருத்திக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியாக நாம் எதிர்வரும் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம்” இவ்வாறு கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.