ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மரணத்தை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலால் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக பல ஆண்டுகளாக பொது வெளிக்கு வருகைத் தராத நஸ்ரல்லா, மத்திய கிழக்கில் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க நபராவார்.
லெபனானின் பெய்ரூட் மீது இஸ்ரேல் மேற்கொண்ட பாரிய வான்தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்திருந்தது.
ஆனாலும் லெபனானிலிருந்து எந்தவொரும் தகவலும் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஹிஸ்புல்லாவின் மத்திய தலைமையகத்தைத் தாக்கியதாகக் கூறி லெபானான் தலைநகர் பெய்ரூட்டை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல் நஸ்ரல்லா ஆரம்பத்தில் நன்றாக இருப்பதாகவும், உயிர் பிழைத்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் பல மணிநேரங்களின் பின்னர் அவரது இறப்பு இஸ்ரேலால் உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது ஹிஸ்புல்லாவும் உறுதிப்படுத்தியுள்ளது.