1961இல் தமிழரசு கட்சியின் அறப்போரில் கலந்து அரசியல் வாழ்வைத் தொடங்கிய
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்.
கிறித்தவர்கள் தமிழரசுக் கட்சியை உடைத்துக் கிறித்தவக் கட்சியாக மாற்ற முயல்கிறார்கள்.
மதமாற்ற முயற்சிகளை வாழ்வியல் நோக்கமாகக் கொண்ட மெதடித்த திருச்சபையின் இணை ஆயராக
53 முழு நேர மதமாற்ற ஊழியர்களுக்குத் தலைமை தாங்கி இந்துக்களை கிறித்தவ சமயத்துக்கு மதமாற்றுபவர் ஆபிரகாம் சுமந்திரன்.
இலங்கை உள்ளிட்ட 10 தெற்காசிய நாடுகளுக்கு நிதி வழங்கி
மதமாற்ற முயற்சிகளுக்காக முழு நேரப் பணியாளராகி இங்கிலாந்தைத் தலைமையாகக் கொண்ட அமைப்பின் தெற்காசியப் பிராந்திய செயலாளர் ஆபிரகாம் சுமந்திரனின் மனைவி திருமதி சாவித்திரி சுமந்திரன்.
மதமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டவர்
தமிழரசுக் கட்சிக்குள் புகுந்து தமிழரசுக் கட்சியைக் கிறித்தவ அமைப்பாக மாற்ற முயல்கிறார் ஆபிரகாம் சுமந்திரன்.
கல்வாரி மலையில் இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த பின் கூறியதான ஆணையை (மத்தேயு 24:14) ஏற்று அவரோடு தமிழரசு கட்சியில் உள்ள ஏனைய கிறித்தவர்களும் முழுமையாக ஆபிரகாம் சுமந்திரனை ஆதரிக்கிறார்கள்.
1 மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்
2 சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம்
3 இராசபுத்திரன் சாணக்கியா
4 பீட்டர் இளஞ்செழியன்
5 இம்மானுவேல் ஆர்னல்டு
ஆகிய ஐந்து கிறித்தவர்கள் சேர்ந்து தமிழரசு கட்சியைப் பிளக்க முயல்கிறார்கள்.
மத வெறியோடு மதமாற்ற முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கல்வாரி மலையின் ஆணையை (மத்தேயு 24:14)
பாலைவனத்திற்காக உருவான கொள்கையைப்
பசுஞ்சோலைக்குள் திணித்து,
கயிலாயம் தொடக்கம் கதிர்காமம் வரை
காந்தாரம் தொடக்கம் ஐராவதி வரை
நீண்டு அகன்ற நிலப்பகுதியின் மரபுகளை உடைத்துப் பொய்யையும் புரட்டையும் ஏமாற்றையும்
தமிழரசுக் கட்சியின் கொள்கை ஆக்க முயல்கிறார்கள்.
கிளிநொச்சிக் கிளையும் சைவப் பரம்பரியத்தின் ஆணிவேரான சிறீதரனும் இறுக்கமாக இருப்பதால் மற்றொரு கிறித்தவரான குருகுலராசா இவர்களோடு இல்லை.
வவுனியாக் கூட்டத்தில் பொது வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்தோர் அனைவரும் சைவத்தில் இறுக்கமானவர்கள் இந்து அமைப்புகள் சார்பானவர்கள்.
திரியாய் இந்து இளைஞர் மன்றத்தின் குகதாசனோ கட்டைபறிச்சான் இந்து இளைஞர் மன்றத்தின் கனகசிங்கமோ ஒரு பொழுதும் மதமாற்றிகளுக்கு ஆதரவு கொடுக்கார்.
1 அம்பாறையின் நன்றிக்கடன் கலையரசன்
2 தென்மராட்சியின் நன்றிக்கடன் சயந்தன்
3 கொழும்பின் விரக்தி விளிம்பர் இரத்தினவடிவேல்
4 முல்லைத்தீவின் அரச நில ஆர்வலர் சாந்தி
5 வவுனியாவின் மருத்துவ நிதி ஆர்வலர் சத்தியலிங்கம்
இவர்கள் வேறு வழி இல்லாமல் மதமாற்றிகளின் பின் சென்ற கொள்கைப் பிடிப்பற்ற அடிமை மனத்தார்.
தலைமை தாங்கியவரோ அல்பிரட் துரையப்பாவின் அடியாள்.
தமிழரசு கட்சியை உடைக்க வேண்டும் பிளக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு கிறித்தவ மதமாற்றிகள் ஊடுருவினர்.
சைவத்தை அளிக்கத் திட்டமிடும் முயற்சியே வவுனியாக் கூட்டத்தின் விளைச்சல்.
மதமாற்றுச் சபைகளே தன்னைத் தேர்தலில் தோற்கடித்தன என வெளிப்படையாகவே அறிவித்தவர் கட்சியின் இன்றைய தலைவர் மாவை.
தன் காலத்திலேயே தமிழரசு கட்சியைப் பிளக்க வேண்டும் என்ற கொள்கை மாவையாருக்கு.
தந்தை செல்வநாயகம் காலத்திலேயே மாவையாரின் உடலோடும் உள்ளத்தோடும் ஊறிய கருத்து.
கட்சித் தீர்மானங்களுக்கு எதிராக மாறாகத் தந்தை செல்வா காலத்திலேயே நடந்து கொண்டார் என மாவையார் மீதான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடலாம்.
பரங்கிப் பெயர்களை வைத்துக் கொண்டிருக்கும் ஆபிரகாமும் சேவியரும் பீட்டரும் ஆர்ணல்டும் சாணக்கியனும் அல்பிரட்டின் அடியாளும்
தமிழரசுக் கட்சியை உடைக்காமல் பிளக்காமல் ஓய மாட்டார்கள்.