ஒரு இன்னிங்ஸில் அதிக பிடியெடுப்புகளை செய்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனியின் சாதனையை துருவ் ஜூரல் சமன் செய்தார்.
பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இந்தியா பி அணிக்கு எதிரான துலீப் டிராபி போட்டியின் போது அவர் தோனியின் சாதனையை சமன் செய்தார்.
போட்டியின் இரண்டாது இன்னிங்ஸில் துருவ் ஜூரல் ஏழு பிடியெடுப்புகளை செய்ததுடன், இந்திய ஏ அணியை 184 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தவும் உதவினார்.
ஜூரலின் சாதனையானது, 2004-05 துலீப் டிராபி போட்டியின் போது, மத்திய மண்டலத்திற்கு எதிராக கிழக்கு மண்டலத்திற்காக விளையாடும் போது, படைத்த தோனியின் சாதனையை சமன் செய்ய முடிந்தது.
எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் ஜூரல் துடுப்பாட்டத்தில் சொதப்பியிருந்தார். அவர் இரண்டு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.
தோனிக்கு முன்னதாக சுனில் பெஞ்சமின் 1973 இறுதிப் போட்டியில் மத்திய மண்டலத்திற்காக, வடக்கு மண்டலத்திற்கு எதிராக விளையாடிய போது ஆறு பிடியெடுப்புகள் மற்றும் ஒரு ஸ்டம்பிங் செய்திருந்தார்.
அதிக பிடியெடுப்பு செய்த வீரர்கள்
எம்எஸ் தோனி (கிழக்கு மண்டலம்) – 2004-05ல் மத்திய மண்டலத்திற்கு எதிராக 7 பிடியெடுப்புகள்
துருவ் ஜூரல் (இந்தியா ஏ) – 2024-25ல் இந்தியா பிக்கு எதிராக 7 பிடியெடுப்புகள்
சுனில் பெஞ்சமின் (மத்திய மண்டலம்) – 1973-74 இல் வடக்கு மண்டலத்திற்கு எதிராக 6 பிடியெடுப்புகள்
சதானந்த் விஸ்வநாத் (தென் மண்டலம்) – 1980-81ல் மத்திய மண்டலத்திற்கு எதிராக 6 பிடியெடுப்புகள்