2 பில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்சியது சுற்றுலா வருமானம்

2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 2.17 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது என்று நாட்டின் மத்திய வங்கியின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 66.1 வீத அதிகரிப்பாகும்.

அதே காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 50.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 1.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர் என்று மத்திய வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Xinhua செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

2024 ஆகஸ்ட் மாத வருகை 164,609 ஆக இருந்தது, இது 2023 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 20 சதவீத அதிகரிப்பாகும்.

இலங்கையில் சுற்றுலாவானது சிறந்த வெளிநாட்டு வருமானங்களை ஈட்டித் தருகின்ற துறைகளில் ஒன்றாகும்.

இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்ப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நலின் பெரேரா அண்மையில் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin