வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறையினருக்கான விடுமுறை

வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறையினருக்கான விடுமுறைதொடர்பிலான அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பளத்துடன் கூடிய விடுமுறையை உரிய நிறுவன அதிகாரிகள் வழங்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, பணியிடத்தில் இருந்து வாக்களிக்கும் இடத்திற்கு செல்லும் தூரம் 40Km ஐ விடவும் குறைவாக இருப்பின் அரை நாள் விடுமுறையும், 40Km – 100Km இற்கும் இடைப்பட்ட தூரம் எனின் ஒரு நாள் விடுமுறையும் 100Km – 150Km இற்கு இடைப்பட்ட தூரம் எனின் ஒன்றரை நாள் விடுமுறையும் 150Km இற்கு மேற்பட்ட தூரம் எனின் இரண்டு நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin