இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ள நிலை தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி மூன்று T20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தது.
இதில் T20 தொடரை இந்திய அணி 3-0 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்தது.
எனினும், ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 2-0 என்ற ரீதியில் தொடரை கைப்பற்றியிருந்தது.
இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது.
இந்நிலையிலேயே, ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் கண்டுள்ளர்.
இலங்கை அணி 97 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்திய அணி தரவரிசையில் தொடர்ந்தும் 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கின்றது.
அவுஸ்திரேலியா அணி இரண்டாம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணி மூன்றாம் இடத்திலும் பாகிஸ்தான் அணி நான்காம் இடத்திலும், நியூசிலாந்து அணி ஐந்தாம் இடத்திலும் தரவரிசையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.