இஸ்ரேல் மீது தொடரும் தாக்குதல்: போர்ப்பதற்றம்

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதனால் மத்தியக்கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அண்மையில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்ததற்கு, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

குறித்த ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் தனது “அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை” பயன்படுத்தி ஏவுகணை தாக்குதல்களை இடைமறித்ததாகக் கூறுகிறது.

இந்தத் தாக்குதல்களினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்தான், கனடா உள்ளிட்ட நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் குடிமக்களை உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன

Recommended For You

About the Author: admin