பொலிஸ்மா அதிபர் விவகாரம்: சபாநாயகரின் அதிரடி முடிவு

பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடுவதற்கு சட்டரீதியான அடிப்படைகள் எதுவும் இல்லை என்பதை எடுத்துரைத்தார்.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த மாதம் 24 ஆம் திகதியன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக,பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பான நிலைமை ஜனாதிபதித் தேர்தல் குறித்த நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதியளித்திருந்தார்.

பின்னர், சிக்கல் நிலை ஏற்படும் என கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினைக்கு பிரதம நீதியரசர் மற்றும் சபாநாயகர் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin