ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 50 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்த உள்ளனர்.
பொதுஜன பெரமுன நேற்று திங்கட்கிழமை தமது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட உள்ளதாக அறிவித்த தீர்மானத்துக்கு ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென கூறும் எம்.பிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
நேற்று இரவும் ஒருசில ஆளுங்கட்சி அமைச்சர்களும், எம்.பிகளும் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர். இந்த நிலையில் இன்று மாலை பெருமளவாக எம்.பிகள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக சற்றுமுன் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கூறினார்.
இதன்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை அனைவரும் நேரடியாக தீர்மானிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தேர்தல் தொடர்பிலான விடயங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.