ஒரே ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பெண்களுக்கான தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் மனு பாக்கர் முதலில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இந்நிலையில், இன்று இடம்பெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் சரப்ஜோத் சிங் கலப்பு அணியில் இடம்பெற்றிருந்த மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று பெரிய சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் தடகள வீராங்கனை என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுக்கொண்டார்.
இது மனுவுக்கு மட்டுமல்ல, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற இரண்டாவது பதக்கமும் ஆகும்.
இதேவேளை, பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.