நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றவர்களை மீண்டும் இந்த நாட்டில் ஆட்சியமைப்பதற்கு மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பேரணியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க, “சமூகத்தை திரட்டி மேல் தரப்பு கீழ் தரப்பு என இரண்டு அதிகாரங்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என சாதாரண அரசியல் இருப்பவர்ளுக்கு சொல்ல விரும்புகின்றேன்.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டு பயணிக்க இன்று வாய்பொன்று கிடைத்துள்ளது.
முன்னதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பிலும், ரணில் விக்கிமசிங்க மற்றொரு தரப்பிலும் செய்யற்பட்டு வந்தனர்.
ஆனால் நெருக்கடி ஏற்பட்டபோது, இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தனர்.
அவ்வாறாயின் சாதாரண ஒரு அரசியலில் ஈடுபட இவர்களால் முடியாதுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி என்பது சாதாரணமாக ஆட்சி செய்யக்கூடிய ஒரு கட்சியாக இருந்தாக நான் நினைக்கின்றேன்.
எனினும், தற்போது ஐக்கிய தேசிய கட்சி என்ற ஒரு கட்சி இல்லாமல், அக்கட்சியின் தலைவர் சுயாதீன வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளார்.
முறையான ஒரு ஆட்சியை நடத்த முடியாமையே இதற்கான காரணமாகும்.
21 திகதி நடத்தப்டும் தேர்தலின் ஊடாக இவை அனைத்தும் மாற்றமடையும் என்ற பாரிய நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஒன்று எமக்கு உள்ளது.
அதனை நாம் உறுதியாக நம்புகிறோம். நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றவர்கள் மீண்டும் இந்த நாட்டில் ஆட்சியமைப்பதற்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.