இலங்கை, மலேசியா, மாலைத்தீவு உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தினை அல்ஜீரியா (Algeria) அறிமுகப்படுத்தியுள்ளது.
வட ஆபிரிக்க நாட்டின் சுற்றுலாத்துறையானது புதிய விசா அற்ற பயணக் கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் குறிப்பிடத்தக்க எழுச்சியை அனுபவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், இந்த கொள்கையானது சுற்றுலாவைத்துறையை மேம்படுத்துவதற்கும், குறித்த நாடுகளில் இருந்து வருகைத்தரும் பயணிகளுக்கான பயண நடைமுறைகளை எளிதாக்குவதன் மூலம் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், அல்ஜீரியாவின் சுற்றுலாத் துறை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
இதன்படி, சுற்றுலாத் துறை பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7.2 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.