இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்க டி20 அணி தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளமையானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வாவிற்கு தனது இராஜினாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்திருந்தார்.
ஹசரங்க, தலைவர் பதவியில் இருந்து விலகுவது இலங்கை கிரிக்கெட்டின் நலன்களுக்காகவும், ஒரு வீரராக அணிக்கு தொடர்ந்து சேவையாற்ற விரும்புவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதனடிப்படையில், T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி ஏமாற்றமளிக்கும் வகையில் வெளியேறியமை, வனிந்துவின் அணுகுமுறை மற்றும் சில ஒழுக்காற்றுப் பிரச்சினைகள் குறித்து அடிக்கடி விமர்சனங்களை வனிந்து ஹசரங்க எதிர்கொண்டார்.
இதனடிப்படையில், அவர் கடந்த காலங்களில் அனுபவித்த சவால்களை சமாளித்து தன்னை மேம்படுத்துவதற்கு ஊக்குவிக்க உதவியது என்று தற்போது கூறியுள்ளார்.
மேலும், “நான் எல்லா நேரங்களிலும் களத்தில் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறேன், அத்தகைய அணுகுமுறை எனக்கு அனைத்து விதமான சவால்களை சமாளிக்க உதவியது மற்றும் சிறப்பாக செயல்பட என்னை ஊக்குவிக்கிறது. இது எந்த வகையிலும் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை,”
விளையாட்டு களத்திலோ அல்லது வெளியிடங்களிலோ விரக்தியில் கூறப்படும் எந்தவொரு கருத்தும் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் யாரையும் குறிப்பிடுவன அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் எனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருக்குமேயானால் அதற்காக நான் மனம் வருந்துவதோடு மன்னிப்பும் கோருகின்றேன் என ஹசரங்க தெரிவித்துள்ளார்.
T20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி முன்கூட்டியே வெளியேறியது கப்டனாக எனக்கும் ஒட்டுமொத்த அணிக்கும் மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
அணி நன்கு தயாராக இருப்பதாக நம்பினேன். ஆனாலும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறியதை ஒப்புக்கொள்கின்றேன். குறிப்பாக பங்களாதேஷுக்கு எதிரான நெருக்கமான போட்டி தோல்வியில் முடிந்தது மிகவும் மனவேதனையை அளிக்கின்றது.
கப்டனாக தனது பொறுப்பை ஒப்புக்கொண்ட ஹசரங்க, சிறந்த முடிவுகளை வழங்காததற்காக தேசத்திடமும் இலங்கை கிரிக்கெட்டிடமும் மன்னிப்பு கோரினார்.
“நானும் அணியும் எங்கள் நாட்டை வீழ்த்திவிட்டோம்,” என்று அவர் ஒப்புக்கொண்டார் எனபதும் குறி்பபிடத்தக்கது.