பறக்கும் தட்டுகள் வானில் பறப்பதாக அவ்வப்போது வரும் செய்திகளை நாம் பார்த்திருப்போம்.
இதுவே அந்த பறக்கும் தட்டு பூமிக்கு வந்து வீதியில் சென்றால் எப்படியிருக்கும்?
ஆம். அமெரிக்காவின் ஒக்லமாகா நகர் வீதியில் வாகன சோதனையில் ஒரு பொலிஸ்காரர் ஈடுபட்டிருந்த வேளையில், அந்த வீதியில் பறக்கும் தட்டு வடிவிலான கார் ஒன்று வந்துள்ளது.
இதைக் கவனித்த பொலிஸ் உடனடியாக காரை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.
இந்நிலையில் நியூமெக்சிகோ நகரத்தில் பறக்கும் தட்டு தொடர்பிலான திருவிழாவொன்று நடைபெற இருப்பதாகவும் அங்கு செல்வதற்காக இந்த கார் இவ்வாறு வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அனுமதியை சரிபார்த்த பொலிஸ் அந்த காரின் அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு கார் செல்ல அனுமதித்துள்ளார். அந்த பதிவை பொலிஸார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
கார் பறக்கும் தட்டு தற்போது வைரலாகி வருகிறது.