மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நியமனங்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத நியமனங்களை உடனடியாக ரத்து செய்யுமாறும், நிலுவையில் உள்ள நியமனங்களை இடைநிறுத்துமாறும் மாகாண ஆளுநர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டம் நடைமுறையில் இருக்கும் வேளையில் இவ்வாறான பதவிகளை வழங்குவது சட்டவிரோதமானது என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அரசாங்கம் தமது தேர்தல் தேவைகளுக்காக அரச ஊழியர்களை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் சட்டவிரோத நியமனங்களை ஆளுநர்கள் ஊடாக வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவந்த பின்புலத்திலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அவசர உத்தரவிவை பிறப்பித்துள்ளது