பொதுவாக வாராஹி என்பவள் வெற்றியை குறிக்க கூடிய தெய்வமாக திகழ்கிறார். புவனேஸ்வரி அம்மனின் படைத்தலைவியாக திகழக்கூடியவள் வாராகி அம்மன் தான். அதனால்தான் அன்றைய காலத்தில் ராஜராஜ சோழன் தன்னுடைய படைகளுடன் போர்க்களத்திற்கு செல்வதற்கு முன்பாக வாராகி அம்மனை வழிபட்டு சென்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட வாராகி தேவியானவள் நிலத்திற்கு சொந்தமாக கருதப்படுகிறார்.
இந்த வாராஹி அம்மனை எந்த முறையில் நாம் வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். அதிர்ஷ்டத்தை தரும் வாராகி வழிபாடு வாராகி அம்மனின் வழிபாடு என்பது இப்பொழுது பிரசித்தி பெற்று வருகிறது.
நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய அற்புதமான தெய்வமாக திகழக்கூடியவள் வாராகி அம்மன். வாராஹி அம்மனை பஞ்சமி திதியிலும் அஷ்டமி திதியிலும் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியது. அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது எந்த வழிமுறைகளை பின்பற்றினால் நமக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
வராகி அம்மனின் வழிபாட்டை எப்பொழுதும் இரவு நேரத்தில் தான் செய்ய வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் வராகி அம்மன் வழிபாட்டை செய்வது என்பது சிறப்பு. எவ்வளவு காலதாமதம் ஆகிறதோ அவ்வளவுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் வராகி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு வாசனை மலர்களை சூட்டி அந்த படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு வாராகி அம்மனுக்கு பிடித்தமான கிழங்கு வகைகள், தயிர் சாதம், நவதானிய அடை போன்றவற்றை படையலாக போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக கிழியாத நல்ல வெற்றிலையாக ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் சிறிதளவு கல் உப்பு, சிறிதளவு மஞ்சள், சிறிதளவு குங்குமம், ஒரு ஏலக்காய் இவை அனைத்தையும் வைத்து உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை மனதாக வாராகி அம்மனிடம் கூற வேண்டும்.
இவ்வாறு கூறிவிட்டு அந்த வெற்றிலையை அப்படியே அம்மனுக்கு முன்பாக வைத்து விடுங்கள். இயன்றவர்கள் வாராகி அம்மனின் கவசம் இருக்கும் அந்த கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். இயலாதவர்கள் யுடூப்பில் போட்டு கூட ஒலிக்க விடலாம்.
அன்றைய தினம் இந்த வெற்றிலையையும் அதில் இருக்கக் கூடிய பொருட்களும் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலையில் எழுந்து இந்த பொருட்களை அப்படியே எடுத்து ஓடுகின்ற நீரில் விட்டு விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்துமே நீங்கிவிடும். மேலும் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். படையலுக்கு வைத்த பொருட்களை அன்று இரவே வீட்டில் இருப்பவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விட வேண்டும்.
இந்த முறையில் பஞ்சமி திதியிலோ அல்லது அஷ்டமி திதியிலோ வீட்டிலேயே வராகி அம்மனை முழு நம்பிக்கையுடன் வழிபடுபவர்களுக்கு வராகி அம்மன் ஒரு பாதுகாப்பு கவசமாக இருந்து கஷ்டங்களிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். மேலும் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.