கடலில் மிதந்த மர்மப் பொருளை பருகிய மீனவர்கள் உயிரிழப்பு

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் நால்வர் மதுசாரம் என நினைத்து விஷ திரவம் ஒன்றை பருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும் இரண்டு மீனவர்களின் நிலைமை மோசமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட “டெவோன்” என்ற பலநாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த 06 மீனவர்களே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (28) இரவு கடலில் மிதந்த போத்தல்களை கண்டு மதுசாரம் என நினைத்து பருகியுள்ளனர்.

குறித்த 06 மீனவர்களும் அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் , இது தொடர்பில் செய்தி அனுப்பும் இயந்திரங்கள் ஊடாக அறிவித்துள்ளதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சுசந்த கஹவத்த,

”தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு பணி நிமித்தம் சென்ற ஆறு மீனவர்கள் நேற்றிரவு கடலில் சில போத்தல்கள் மிதப்பதை அடையாளம் கண்டுள்ளனர்.

மதுபானம் என நம்பி, அந்த போத்தல்களில் இருந்த திரவத்தைஎ இன்று காலை பருகியுள்ளனர் . இதனால் 06 பணியாளர்களும் சுகவீனமடைந்துள்ளனர்.

செய்தி கிடைத்ததன் பின்னர், கப்பல் இருக்கும் இடம் கண்காணிக்கப்பட்டது.

இதுவரை இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin