இந்த மாதத்திற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் 20ம் திகதி முடிவடைந்திருந்த போதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுகமைய மிக அவசரமாக கூடாப்படவுள்ளது.
இதன் பிரகாரம் 27 மற்றும் 28ம் இரு. தினங்களில் விசேட சபை அமர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்க மட்டத்தில் கிடைக்கும் தகவலுக்கமைய 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு விசேட உரை ஆற்றி 27மற்றும் 28 ம் திகதிகளில் ரணில் சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் விசேஷமாக பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அத்தோடு சிலஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன அவசர அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதாக 26ம் திகதி மக்களுக்கு ஆற்றவுள்ள விசேட உரையில் நாட்டை பொருளாதார சரிவில் இருந்து மீட்டு விட்டதாக அறிவிக்கவும் அதற்காக ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நாட்டின் பல பாகங்களில் அதை கொண்டாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுளன.
இதே போல் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை அனுமதி கிடைத்த பொழுதும் ஐக்கிய தேசிய கட்சியின் சில அமைப்பாளர்கள் கொண்டங்களை நடத்தினர்.