ஜனாதிபதி விசேட உரை குறித்து எதிர்க்கட்சி கேள்வி

“இலங்கை திவாலாகிவிட்டதாகக் கருதப்படாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீள அறிவிப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதியின் விசேட உரை, நாளை புதன்கிழமை (26.06.24) இரவு 08 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களின் வாயிலாகவும் ஔிபரப்பப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“கடந்த வருடம் மார்ச் மாதம் இலங்கை திவாலாகிவிட்டதாகக் கருதப்படாது என்று ஜனாதிபதி அறிவித்தார்.

இந்த வாரம் புதன் கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரையின் போது ஜனாதிபதி இதனை மீண்டும் அறிவிப்பதன் மூலம் என்ன உத்தேசித்துள்ளார்?

ஜனாதிபதி அவ்வாறானதொரு அறிக்கையை விடுத்து வீடுகளுக்கு வரி விதிக்க அல்லது ஏனைய துறைகளில் வரிகளை அதிகரிக்கத் தயாராக உள்ளாரா என நான் பயப்படுகிறேன். இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் வாழ முடியாமல் சாக வேண்டிய நிலை ஏற்படும்.

தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரத்தை அடுத்த மாதம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுக்கொள்ளும்.

ஜனாதிபதியின் அண்மைய முயற்சிகள் அரசாங்கத்தின் புதிய தந்திரமாகும். கருத்துக் கணிப்புகளின் படி, ஐனாதிபதி முன்னிலை வகிக்கவில்லை” என்றார்.

Recommended For You

About the Author: admin