ஆங்கில கால்வாயை ஒரேநாளில் கடந்த 882 புகலிடக் கோரிக்கையாளர்கள்

அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஆங்கில கால்வாயைக் கடந்து இங்கிலாந்து நாட்டுக்கு ஒரே நாளில் 882 பேர் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு உள்துறை அலுவலகம் வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில், 711 பேர் தான் ஒரே நாளில் அதிகமாக கடந்ததாக பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு 947 பேர் கடந்த நிலையில் இந்த ஆண்டு தான் அதற்கு கிட்டதட்ட இணையான ஒரு குழு ஆங்கில கால்வாயை கடந்துள்ளது.

அந்நாட்டின் உள்துறை அமைச்சின் தகவலின் அடிப்படையில்,

சராசரியாக 15 படகுகள் அவ்வழியே சென்றுள்ளதாகவும் ஒரு படகில் சுமார் 59 பேர் மாத்திரமே பயணம் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு சம்பவம் 2023ஆம் ஆண்டு பதிவாகியிருந்ததாகவும் அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் சிறிய படகுகள் மூலம் வந்தவர்களின் எண்ணிக்கை இப்போது மொத்தமாக 12,313 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை 18 விகிதம் அதிகமாகும்.

இது 2022இல் இந்த கால கட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களின் மொத்தத்தை விட 5 விகிதம் அதிகமாகும். 2022இல் இது 11,690 ஆக இருந்தது.

2023ஆம் ஆண்டு முழுவதும் 29,437 வருகைகள் பதிவாகின. 2022 இல் 45,774 வருகையுடன் 36 விகிதம் குறைந்துள்ளது.

“சிறிய படகுகளை நிறுத்துவோம்” என்று அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி பதிவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக உரிய நடவடிக்கைகளை பிரதமர் ரிஷி சுனக் செயற்படுத்தவில்லை எனவும் அவர் பதவியேற்றதில் இருந்து சுமார் 50,000 ற்கும் அதிகமானோர் ஆங்கில கால்வாயை கடந்துள்ளதாகவும் இந்த ஆண்டு மாத்திரம் 49,376பேர் கடந்துவிட்டதாகவும் பிரபல ஊடகமான நியுஸ் ஸ்கை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரச்சாரப் போர்க்களமாக மாறிய குடியேற்றம்

பொதுத் தேர்தல் மே 22 அன்று அறிவிக்கப்பட்டதில் இருந்து 2,000க்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புகலிடக் கோரிக்கையாளர்களின் குடியேற்றம் ஒரு முக்கிய பிரச்சாரப் போர்க்களமாக இருப்பதால் 2,431 பேர் கடந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சமீபத்திய புகலிடக்கோரிக்கையாளர் நெருக்கடி காரணமாக 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஆறரை ஆண்டுகளில் 126,658 பேர் கால்வாயை கடந்து இங்கிலாந்துக்கு வந்துள்ளனர்.

புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவிற்கு அனுப்ப அரசாங்கம் 2022 ஏப்ரல் இல் ஒப்பந்தத்தை மேற்கொண்டதில் இருந்து சுமார் 81,677 பேர் இங்கிலாந்துக்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended For You

About the Author: admin