2015 மற்றும் 2020 க்கு இடையில் இலங்கையில் 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
காலி மாவட்ட சபை உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று (18) பாராளுமன்றத்தில் வழங்கிய பதிலில் இது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட கணக்கெடுப்பின் கீழ்,
இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 63,917ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், 2015ஆம் ஆண்டில், இதற்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17,126 ஆகவும், குடியுரிமை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,184 ஆகவும் உள்ளது.
2016ஆம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமைக்காக 14,802 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 13,933 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
2017இல் 9,549 விண்ணப்பங்களும், 2018இல் 9,750 விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்படி, 2017 இல் 8,881 மற்றும் 2018 இல் 8,747 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டில், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 8,702 ஆகவும், வழங்கப்பட்ட எண்ணிக்கை 7,405 ஆகவும் உள்ளது.
மேலும் 2020 ஆம் ஆண்டில், 3,988 விண்ணப்பதாரர்கள் மற்றும் 3,154 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதையும் அவர் அறிக்கையூடாக வெளிப்படுத்தியுள்ளார்.