T20 உலகக் கிண்ண வரலாற்றில் முறியடிக்க முடியாத சாதனையை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் படைத்துள்ளார்.
நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதன்படி, T20 உலகக் கிண்ண தொடரின் ஒரு போட்டியில் நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெர்குசன் பெற்றுள்ளார்.
டிரினிடாட்டின் தருபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இடம்பெற்ற போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
மேலும் அவர் இந்தப் போட்டியில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். T20 போட்டிகளில் நான்கு மெய்டன்களையும் வீசிய இரண்டாவது பந்துவீச்சாளர் பெர்குசன் ஆவார்.
எனினும், T20 உலகக் கிண்ணத்தில் நான்கு மெய்டன் ஓவர்களை வீசியவர் என்ற பெருமை பெர்குசனை சாரும்.
முன்னதாக கனடா அணியின் தலைவர் சாத் பின் ஜாபர் T20 போட்டி ஒன்றில் நான்கு மெய்டன் ஓவர்களை வீசியவர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி ஏழு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றிருந்தது.
நியூசிலாந்து அணி T20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் சுற்றுடன் வெளியேறிய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.