ஆபிரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா, மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 10 பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அவரது சொந்த ஊரான சைப்பே நகரத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இறுதிச்சடங்கில் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது, அந்த வழியே வந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இறுதிச்சடங்கு ஊர்வலத்துக்குள் வேகமாக சென்றுள்ளது.
இதனால் அங்கிருந்தவர்கள் ஆளுக்கொரு திசையில் ஓட, இச் சம்பவத்தினால் ஒரு கர்ப்பிணி பெண் உட்பட மொத்தமாக 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இதில் காயமடைந்த 12 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துணை ஜனாதிபதி ஒருவரின் இறுதிச்சடங்கின் நிகழ்வின்போது கார் மோதி நால்வர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.