கொழும்புத் துறைமுகத்தில் நாளை (13) நடைபெறவுள்ள 11 உர கொள்கலன்களுக்கான விலைமனுக்கோரல், பாதாள உலகக் குழுவினால் கையக்கப்படுத்தப்படவுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துறைமுக அதிகாரிகள் உதவியுடன் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து, துறைமுகத்தில் உள்ள இரண்டாம்தர உர வியாபாரிகளிடம் அதிக தொகைக்கு விற்று இலாபம் ஈட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இம்முறை விலைமனு கோரலில் பங்கேற்க வேண்டாம் என பல உர வியாபாரிகளுக்கு துறைமுகத்தில் உள்ள பாதாள உலகக் குழுக்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விலைமனுக்கோரலில் பங்குபற்றுவதற்காக உர விற்பனையாளர்களின் அனுமதிப்பத்திரத்தை பெற்று உரத்தை பெறுவதற்கு பாதாள உலக சார்பு குழுக்கள் தயாராகி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் பரிசீலித்து வெளிப்படைத் தன்மையுடன் விலைமனுகோரல் நடத்தப்படும் என துறைமுகத் தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.