அணுவாயுத பயிற்சியை ஆரம்பித்த ரஷ்யா

மேற்கத்திய சக்திகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக மொஸ்கோ கூறிய சில மணித்தியாலங்களின் பின்னர் பெலாரஸ் துருப்புக்களுடன் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான பயிற்சியின் இரண்டாம் கட்டப் பயிற்சியை ரஷ்யா இன்று தொடங்கியுள்ளது.

அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதன் மூலம் உலகை அணுசக்தி மோதலின் விளிம்பிற்கு தள்ளுவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் ஆயுதங்களின் ஊடாக ரஷ்யாவின் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல் நடத்துவதாகவும் ரஷ்யா கூறுகிறது.

உக்ரைன் – ரஷ்ய போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவிகளை வழங்கும் சந்தர்ப்பங்களில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயாராக இருப்பதான தொனியில் புடின் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

இந்த கருத்துகள் தற்போது தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அணுவாயுத தயார்ப்படுத்தல்களுக்கான உத்தரவின் மூலம் சொல்லும் செய்தியென சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin