இலங்கையில் கோழிக்குஞ்சுகளின் தேவை அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி.ஆர்.அழககோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆண்டு ஒன்றுக்கு நாட்டின் முட்டை தேவை 44,000 இனால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த வருடம் இதுவரையில் மாத்திரம் 122,000 கோழிக்குஞ்சுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எச்.எம்.பி.ஆர்.அழககோன் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆண்டுகளில் இந்தத் தேவை சுமார் 80,000 ஆக காணப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.