வீதி நாடகம் நடத்தியமை, பொது மக்களை அடக்குமுறை மற்றும் பொலிஸ் கடமைக்கு இடையூறு செய்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு குருந்துவத்தை பொலிஸாருக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது குழுவினர் பெண் உரிமைக்காக வீதி நாடகம் ஒன்றை கடந்த 2022ஆம் ஆண்டு நடத்தி பொது மக்களுக்கு இடையூறு விளைவித்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பிலான முறைப்பாடு கோரப்பட்ட நிலையிலேயே நீதவான் குருந்துவத்தை பொலிஸாருக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 13 பெண்கள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.