இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தனிப் பெரும் வல்லரசாக மாற முற்படும் இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய ஜனாதிபதி முன்னிலையில் கம்பீரமாக பதவியேற்றார்.
இவ்வாறு அவர் பதவியேற்பது மூன்றாவது முறையாகவே.
இதற்கு முன்னர் இந்தியாவில் இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக பதவியேற்றவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவர்ஹலால் நேரு மாத்திரமே.
இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்க, டட்லி சேனநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க பல சந்தர்ப்பங்களில் பிரதமர் பதவி வகித்திருந்தாலும் கூட அவர்களுள் ஒருவரும் தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக பதவியேற்றதில்லை.
இரு முறைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாத காரணத்தினால் ஆர்.பிரேமதாச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச தவிர்த்த ஏனைய ஜனாதிபதிகள் அனைவரும் இரு தடவைகள் மாத்திரமே பதவி வகித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அயல்நாடுகளில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 8000 பிரதம விருந்தினர்கள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துக் கொண்டனர். எனினும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எந்தவொரு அரச தலைவர்களும் நிகழ்வில் கலந்துக் கொள்ளவில்லை.
இந்தியா- சீனா உறவு
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு இயல்பு நிலைக்குத் திரும்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2020 ஆம் ஆணடில் கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன இராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பில், பல பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் இரு நாடுகளுக்கிடையிலான எல்லை மோதல் இன்னும் நீடித்து வருகிறது.
இந்நிலையில், இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு சீன வெளியுறவு அமைச்சகம் வாழ்த்து தெரிவித்திருந்தது.
குறித்த வாழ்த்தில் இந்தியா சீனா இடையிலான உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் தொடரும் எனவும் சீன மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரண்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இந்தியா- பாகிஸ்தான் உறவு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட நாட்களாக பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன.
தற்போது இரு நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான சூழலை இந்தியா உருவாக்கும் என நம்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை பேண பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் காணப்படக்கூடிய ஜம்மு-காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட இரு நாடுகளிடையே உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பல்வேறு முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.
இந்தியா இலங்கை உறவு
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றமை ஒரு வகையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்த இது நல்ல சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.
நுணுக்கமான அரசியல் அறிவைக் கொண்ட ரணில் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளை மேற்கொண்டு வருவதாகவும் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும், தற்போதைய தேர்தல் நிலைமையின் படி, சட்ட விரேதமாக ரணில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாவிட்டால் அதற்கு மேற்கத்தேய நாடுகள் முக்கியமாக இந்தியா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமா என்ற கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இலங்கையுடன் சீனா மேற்கொண்டுள்ள தொடர்புகளை குறைக்க இணைக்கம் தெரிவிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் இந்தியாவின் மற்றும் மேற்கத்தேய நாடுகளின் பூரண ஆதரவு கிடைக்கும்.
இவ்வாறான ஒரு நிலையிலேயே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக மற்றும் ரணில் பிரதமராக பதவி வகித்திருந்த 2016 இல் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.