கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை அடுத்தவாரம்: ரிஷி சுனக்

கன்சர்வேடிவ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவரும் பிரதமரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான பென்னி மோர்டான்ட் பிபிசி தொலைக்காட்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் தெரிவித்தார்.

“ஏற்கனவே சில அறிவிப்புகளைக் கேட்டிருக்கிறீர்கள். அடுத்த வாரம் எங்கள் தேர்தல் அறிக்கையில் இன்னும் பலவற்றைக் காண்பீர்கள்.

மக்களின் வரிகளைக் குறைக்க வேண்டும். வணிகச் சுமைகளைக் குறைக்க வேண்டும்.” என பென்னி மோர்டான்ட் கூறினார்.

பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழில் கட்சியும் ஜூலை 4 தேர்தலுக்கு முன்னதாக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக் கணிப்புகளில் கன்சர்வேட்டிவ் கட்சியை விட தொழிற்கட்சி அதிக முன்னிலை பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரிஷி சுனக் மீண்டும் பிரதமராக தெரிவாகுவது மிகவும் கடினம் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், தமது தேர்தல் அறிக்கையின் பின்னர் மக்களின் ஆதரவை பெற முடியும் என கன்சர்வேட்டிவ் கட்சி தெரிவிக்கிறது.

Recommended For You

About the Author: admin