பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலச்சரிவு: 670 பேர் உயிரிழந்திருக்கலாம்

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் 670க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை AFP இடம் தெரிவித்துள்ளார்.

அந்த அனர்த்தத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐ.நா இடம்பெயர்வு நிறுவன அதிகாரி செர்ஹான் அக்டோப்ராக் தெரிவித்துள்ளார்.

“மேலும், அந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்படுமாக இருந்தால் நிலைமை மோசமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது, இது சம்பந்தப்பட்ட எவ்ரோனுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்தில் இருந்து 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், உணவுத் தோட்டங்கள் மற்றும் நீர் விநியோகங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அக்டோப்ராக் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மண்ணுக்கு அடியில் புதையுண்டுள்ள உடல்களை மீட்க விவசாயத்திற்கு பயண்படுத்தப்படும் ஆயுதங்களை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டுள்ளதாகவுமு், இது குறித்து அதிகாரிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவத்துள்ளார்.

தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இருந்து சுமார் 600 கிமீ (370 மைல்) தொலைவில் உள்ள மாகாணத்தின் முலிடாகா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஆறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin