எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியும் திட்டமும் ஐக்கிய மக்கள் கூட்டணியிடம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்காக பாடுபடுவோம் எனவும், சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதற்காக செயற்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமாயின் பொதுத் தேர்தலில் அதிகபடியான ஆசனங்களுடன் நாடாளுமன்ற அதிகாரத்தை பெற்றூ அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு அஞ்சாமல் பாடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார;
ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு கட்சியினால் அதிகாரத்துடன், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, அந்த ஆணையைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
அந்த ஆணை ரணில் விக்கிரமசிங்க அணிக்கு காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், அதை நாம் எதிர்த்தோம்.
அப்படிப்பட்ட ஒரு குழுவுக்கு மீண்டும் அதிகாரத்தை கொடுக்கும் அளவுக்கு நம் நாட்டு மக்கள் பலவீனமடையவில்லை என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.