இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தை விட்டு வெளியேறிய 15,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் சட்டபூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முதல் மே 20ஆம் திகதிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
இதன்போது, இராணுவத்தில் இணைய விருப்பமில்லாதவர்கள் மற்றும் தொடர்ந்து வருகையில் வீழ்ச்சியுடைவர்களுக்கும் நிரந்தரமாக வெளியேறும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
பொதுமன்னிப்பு காலத்தின் முடிவில், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுப்பு இல்லாமல் இருந்த மொத்தம் 15,667இராணுவ வீரர்கள் தங்கள் மையங்களில் இருந்தும் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டனர்.
சட்டபூர்வமாக வெளியேற்றம் பெற்றவர்களில் 373 இராணுவ வீரர்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் விடுப்பு இன்றி வெளியேறி இருப்பதாகவும் இலங்கை இராணுவம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.