நியூ கலிடோனியாவில் அவரச நிலை பிரகடனம்

1980 களின் பின்னர் நியூ கலிடோனியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அமைதியின்மையில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் காயமடைந்துள்ளனர்.

நியூ கலிடோனியாவில் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு எதிராக சுதந்திர ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் வன்முறையாக மாறியுள்ளது.

போராட்டக்காரர்களுடனான மோதலில் பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ள நிலையில், பல்வேறு கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் உயர்ஸ்தானிகலாயம் நேற்று (14) செவ்வாய்க்கிழமை நியூ கலிடோனியாவில் தலைநகர் நௌமியாவில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

இந்த வன்முறை காரணமாக சுமார் 130 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்கு நியூ கலிடோனியாவில் அவசரநிலையை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin