பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரான்ஸை வந்தடைந்தது ‘ஒலிம்பிக் தீபம்’

பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரீஸில் கடந்த மாதம் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம் பல நாடுகளின் வழியாக இன்று பிரான்ஸின் பழைய துறைமுகமான மார்சேவை வந்தடைந்துள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஒலிம்பிக் தீபம் பிரான்ஸின் பல நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு இன்னும் 79 நாட்கள் உள்ள நிலையில் ஒலிம்பிக் தீபம் பிரான்ஸுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமையின் மூலம் அதனை பாதுகாக்கும் மிகப்பெரிய சவாலும் பிரான்ஸுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒலிம்பிக் தீபத்தை பிரான்ஸில் 150,000 பேர் வரை வரவேற்பார்கள் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பட்டாசு கொழுத்தி, இசை கச்சேரி நிகழ்வுகளின் ஊடாக ஒலிம்பிக் தீபம் வரவேற்கப்பட உள்ளது. இந்த நிகழ்வை பிரான்ஸின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 6,000 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நான்கு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீச்சல் வீரர் புளோரன்ட் மானாடோ இந்த நிகழ்வின் போது ஒலிம்பிக் தீபத்தை ஏந்த உள்ளார்.

“2024 பாரிஸ்“ ஒலிம்பிக்கிற்கான தீபம் ஏப்ரல் 16ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது. நடன விழாவானது பண்டைய கிரேக்க மரபுகள் மற்றும் நாகரீகத்தை பின்பற்றி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 26 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளதுடன், ஆரம்ப நிகழ்வில் 300,000 பேர்வரை கலந்துகொள்ள உள்ளனர்.

Recommended For You

About the Author: admin