‘Miss USA’ அழகிப் பட்டம் வென்ற நோலியா வோய்கட், மனநலக் காரணங்களுக்காக தனது கிரீடத்தைக் கைவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடந்த வருடாந்த அழகிப் போட்டியில் வெற்றியடைந்த வோய்கட்,
‘உங்கள் மன ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் குரலை உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்துங்கள். நிகழ்காலத்தை நிச்சயமற்றதாக உணர்ந்தாலும் எதிர்காலத்தைப் பற்றி பயப்பட வேண்டாம்’ எனவும் தனது முடிவை இன்ஸ்டாக்ராமில் அறிவித்துள்ளார்.
‘மிஸ் யூஎஸ்யூ’ அமைப்பினர் நோலியாவின் முடிவை ஆதரிப்பதாகவும் கிரீடத்துக்கான சொந்தக்காரரை அறிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதன்படி தற்போதைய மிஸ் யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஒஃப் அமெரிக்காவாக இருக்கும் நோலியா வொய்கட், இராஜினாமா செய்துள்ள நிலையில், இரண்டாம் இடத்தைப் பெற்ற சவன்னா கன்கிவிச்க்கு மகுடம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது.