டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 30 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சஞ்சு சாம்சனின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அபாரமாக துடுப்பெடுத்தாய அவர் 84 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன் அடித்த பந்து எல்லைக் கோட்டுக்கு மிக அருகில் வைத்து ஷாய் ஹோப் பிடியெடுத்தார். இதன் போது அவரின் கால் எல்லைக் கயிற்றைத் தொட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
அவர் ஆட்டமிழந்த பின்னர் அணியின் நிலைமை தலைகீழாக மாறியது.
இந்தப் போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக சஞ்சு சாம்சனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
“ஐபிஎல் நடத்தை விதிகள் 2.8 இன் கீழ் லெவல் 1 குற்றத்தில்” அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் டெல்லி அணி 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 221 ஓட்டங்களை குவித்திருந்தது. எனினும், ராஜஸ்தான் அணியால் 201 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இந்த வெற்றியின் மூலம் ப்ளேஓப் வாய்ப்பை டெல்லி அணி பிரகாசப்படுத்தியுள்ளது.