பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் தமது குழந்தைகளை தத்துக் கொடுக்கின்றமை அதிகரித்து வருவதாக மதிப்பீடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்டொன்றிற்கு சராசரியாக 1700 குழந்தைகள் தத்துக் கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் குழந்தைகளை ஏனோயோருக்கு வழங்குதல் தொடர்பான தகவலை பதிவாளரருக்கு அறிவிக்க வேண்டும்.
இதனடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் கொண்டு மதீப்பீடுகள் வெளியாகியுள்ளன.
பொருளாதாரச் சிக்கல்கள், திருமணத்துக்குப் பின் தகாத உறவுகள் போன்ற சமூகப் பிரச்சனைகளால் குழந்தைகள் அதிகளவு தத்துக்கொடுக்கப்படுவதற்கான காரணமாக அமைகின்றது.
இதேவேளை, நாட்டில் கருக்கலைப்புச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.