“இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு“

விடுமுறை கோராது கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரைவிடுமுறை கோராது கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தினருக்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை இரு வாரங்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்புக் காலத்தின் போது 9,770 பேர் இராணுவத்திலிருந்து விலகியுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், 9,735 இராணுவ வீரர்கள் அந்தந்த முகாம்களிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,விடுமுறை கோராது கடமைக்கு சமூகமளிக்காத வெளிநாட்டிலுள்ள 35 இராணுவ வீரர்களும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin