கொனிபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழீழ அணியின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழீழ கால்பந்து சங்கத்தின் ஊடாக (TEFA) தமிழீழ அணி பங்கேற்க உள்ளது.
இந்த போட்டி நோர்வேயில் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் 9ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
போட்டியை சுதந்திர கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (CONIFA) ஏற்பாடு செய்துள்ளது.
FIFA அல்லாத இணைந்த அணிகளின் கால்பந்து திறன்கள் இங்கு அளவிடப்படுவதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் போட்டியின் முதல் சுற்றில் திபெத் மற்றும் செக்லி லேண்ட் அணிகளை தமிழீழ அணி எதிர்கொள்ள உள்ளது.
2023ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண வெற்றியாளர்களானதன் பிரகாரம் தமிழீழ அணி கொனிபா மகளிர் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் 17 அணிகள் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியில் விளையாடும் தமிழீழ அணியின் பெயர் விவரம் கீழ் உள்ள புகைப்படத்தில்.