அமெரிக்கா யுக்ரேனுக்கு வழங்கிய நான்கு ATACMS நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா வீழ்த்தியுள்ளது.
மாஸ்கோவுடன் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தின் மீது உக்ரைனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரவுநேர தாக்குதலை முறியடித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று சனிக்கிழமை(04) அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் சேத விபரம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகியாகவில்லை.
உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக முதன்முறையாக கடந்த வருடம் ஒக்டோபரில் US ATACMS ஏவுகணைகளை வழங்கியது.
இந்த ஏவுகணைகள் மோதலின் முடிவை அடிப்படையில் மாற்றாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதேவேளை,சில மாதங்களாக அமெரிக்க விநியோகங்களில் தாமதம் ஏற்பட்டதால் உக்ரேனியப் படைகள் வெடிமருந்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன